திம்பம் மலைப்பாதையில் புலி நடமாட்டம்

சத்தியமங்கலம்: ஈரோடு பகுதியைச் சேர்ந்த யூசுப் மற்றும் அவரது நண்பர்கள் தனது காரில் நேற்று அதிகாலை தாளவாடி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது 26 வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவர் மீது புலி ஒன்று படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக செல்போனில் படம் பிடித்தனர். வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்ட புலி மெதுவாக எழுந்து சென்று சாலையோர தடுப்பு சுவரிலிருந்து, கீழே இறங்கி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இரவு மற்றும் பகல் நேரங்களில் சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்….

Related posts

காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!!

இயக்குநர் பார்த்திபன் அளித்த புகாரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்கு!!

சென்னையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி பணம் பறிப்பு..!!