திம்பம் மலைப்பாதையில் கிரானைட் கல் பாரம் ஏற்றி வந்த லாரி பழுதால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து நேற்று காலை கிரானைட் கல் பாரம் ஏற்றிய லாரி சேலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று சென்று கொண்டிருந்தது. 13வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிரேன் இயந்திரத்தை வரவழைத்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். லாரியை கிரேன் மூலம் மீட்கும்போது எதிர்பாராதவிதமாக மீண்டும் லாரி கிரேனில் முன் பகுதியின் மீது விழுந்து கிரேன் சேதமடைந்தது. இதையடுத்து மீண்டும் சத்தியமங்கலத்திலிருந்து 2 கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு லாரி நகர்த்தப்பட்டது. இதன் காரணமாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை திம்பம் மலைப்பாதையில் அனுமதிப்பதால் இது போன்று அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை கண்டறிந்து திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்காமல் தடுத்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் எனவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு