திமுக வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், ஜூலை 6: ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் பெயர் மாற்றத்தை கண்டித்து திமுக வக்கீல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை கோர்ட் வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மத்திய மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மணவழகன் தலைமை வகித்தார். மூத்த வக்கீல்கள் அமர்சிங், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய 3 குற்றவியல் சட்டங்கள் மற்றும் பெயர் மாற்றம் ஆகியவற்றால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதில் வக்கீல்கள் பூங்கோதை, பாலகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்: கும்பகோணம் நீதிமன்றம் முன்பு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி சார்பாக மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், ராஜசேகரன், இளையராஜா, தாஜ்முகமது, மாநகர தலைவர் வைத்தியநாதன் மற்றும் மாநகர துணை அமைப்பாளர் காஸ்பரோவ் ஆனந்த் முன்னிலை வகித்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட திமுக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக 3 புதிய சட்டத்திருத்தங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்