திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

 

காஞ்சிபுரம்: பெண்ணை நிர்வாணப்படுத்தி தலைகுனிய வைத்த மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் காவலன் கேட் அருகே நேற்று நடந்தது. இதில், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தொண்டர் மகளிர் அமைப்பாளர் மாலதி வரவேற்று பேசினார். நிர்வாகிகள் சாந்தா, விஜயலட்சுமி ராபர்ட், தேவிகா, கற்பகம், பூக்கொடி பழனி, சத்தியபாமா, ரத்தினமாலா, விஜயா புருஷோத்தமன், பத்மாவதி, கண்ணகி, சம்யுக்தா, பவ்யா, ராஜலட்சுமி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், எம்எல்ஏக்கள் சுந்தர், ஏழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் இனிய அரசு, கோகுல கண்ணன் மலர்விழி, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் தமிழ் செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் குமார், குமணன், பாபு, சேகர், ஞானசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ். ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் செம்பருத்தி துர்கேஷ், ஒன்றிய குழு துணை தலைவர்கள் திவ்யப்ரியா இளமது, வசந்தி குமார், சுப்புலட்சுமி பாபு, பத்மாபாபு, இல்லாமல்லி ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமான மகளிர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் விஜயாரவி நன்றி கூறினார். செய்யூர்:பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் சர்வதேச சட்ட உரிமைகள் கழகம் சார்பில் மணிப்பூரில் நடந்த பெண்களுக்கு மீதான பாலியல் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கி அதற்கு காரணமான மத்திய பாஜ அரசு அம்மாநில அரசு பதவி விலக வேண்டும் என கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச சட்ட உரிமைகள் கழக மாநில தலைவர் அகமது ரியாஸ் தலைமை தாங்கினார். அதன் தேசிய தலைவர் மனோகர் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ், லத்தூர் ஒன்றிய பொருப்பாளர் செய்யூர் ஜெகன், பழங்குடியின பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை