திமுக பிரசாரத்தை தடுக்கவே வழக்குகள் லியோனி பேச்சு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே மாதவரம் திமுக வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய திண்டுக்கல் லியோனி, திமுக பேச்சாளர்கள் பெண்களை அவமதிப்பவர்கள் இல்லை. என் பேச்சால் பெண்கள் மனதை புண்படுத்தி இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திமுகவினர் பிரசாரத்தை தடுக்கவே எங்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன. நீதிமன்றத்தையும், பெண் பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக பேசிய பாஜவினர் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசு, எங்களை ஒடுக்க பார்க்கிறது. 3 மாணவிகளை எரித்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்களை விடுதலை செய்தவர் எடப்பாடி பழனிசாமி. பெண் எஸ்பிக்கே பாதுகாப்பில்லாத அரசு அதிமுக அரசு. திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த பல்வேறு திட்டங்களை ஏட்டிக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். …

Related posts

அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அறிப்பு

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…