திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 

ஒட்டன்சத்திரம், ஜூன் 24: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கொத்தயத்தில் தொழில்பேட்டை அமைக்க ஆய்வு பணிகளை மேற்கொண்ட அமைச்சர் அர.சக்கரபாணிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பொன்ராஜ், ஒன்றிய செயலாளர் தர்மராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றியதுணை பெருந்தலைவர் தங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி உள்ளிட்ட இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி