திமுக தேர்தல் வாக்குறுதிப்படி அடுத்த ஆண்டு முதல் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்: சபாநாயகர் அப்பாவு உறுதி

களக்காடு: திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பெண்களுக்கான உரிமை தொகையான ரூ.1000 அடுத்தாண்டு வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள தோப்பூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. ரூபி.மனோகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘முதல்வர் மு.க. ஸ்ரீடாலின் தலைமையிலான திமுக அரசு, சாமானிய மக்களுக்கானது. ஏழைகளை பற்றி சிந்திக்கக்கூடிய அரசு. சாமானிய மக்களின் வீட்டு பிள்ளைகளும், சர்வதேச அளவில் தொழில்நுட்பத்துடன் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசு பள்ளிகளில் ஸ்ரீமார்ட் வகுப்பறைகளை முதல்வர் துவங்கி வருகிறார். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் உரிமை தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் மு.க. ஸ்ரீடாலின் அறிவித்திருந்தார். ஆனால், கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்தது. அந்த கடனுக்கு மாதாமாதம், பல ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கொடுக்க வேண்டியதுள்ளது. இந்த நிதி நெருக்கடியால் தான் பெண்களுக்கான உரிமை தொகை 1000 ரூபாயை உடனடியாக வழங்க முடியவில்லை. நிதி நெருக்கடிகளை முதல்வர் சீர் செய்து வருவதால் பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் அடுத்தாண்டு உறுதியாக வழங்கப்படும். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை முதல்வர்தான் அறிமுகப்படுத்தியுள்ளார். பட்டித்தொட்டியெல்லாம் பள்ளிகளை திறந்த பெருந்தலைவர் காமராஜர் புகழை பறைசாற்றும் வகையில் கல்லூரிகளில் அரசு நிதியின் மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு காமராஜர் நினைவு கட்டிடம் என பெயர் சூட்டுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் 831 கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் 18 மாதங்களில் 96 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும்’’ என்றார்….

Related posts

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!