திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டிஆர்பி.ராஜா நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக, கழக தலைவரிடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, கழக சட்டதிட்ட விதி: 31 – பிரிவு: 19ன் படி அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.இதேபோல், அயலக அணிச் செயலாளராக பணியாற்றி வந்த டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதால் கழக சட்டதிட்ட விதி: 31 – பிரிவு: 20ன் படி அவருக்கு பதிலாக, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அயலக அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை