Thursday, September 19, 2024
Home » திமுக சார்பில் வெளியிட்ட அறிக்கை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 61 திட்டங்கள்

திமுக சார்பில் வெளியிட்ட அறிக்கை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 61 திட்டங்கள்

by kannappan

சென்னை: காஞ்சி, செங்கை மாவட்டங்களுக்கு, தேர்தல் அறிக்கையில், 61 திட்டங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:* ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.* வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.* வேளச்சேரியில் இருந்து மாமல்லபுரத்துக்கு பறக்கும் விரைவு ரயில் திட்டம்  விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.* வண்டலூர்- வாலாஜாபேட்டை ரயில் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.* குன்றத்தூர், மாங்காடு, திருநீர்மலை ஆகிய ஊர்களில் ெசன்னைப் பெருநகர்  குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். * நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பயன்கள் ஆலந்தூர் மற்றும்  பல்லாவரம் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.* காஞ்சிபுரத்தில் அண்ணா நூற்றாண்டு பட்டுப் பூங்கா மீண்டும் செயல்பட  நடவடிக்கை எடுக்கப்படும்.* காஞ்சிபுரத்திலும், செய்யூரிலும் சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.* செய்யூர்- ஆலம்பறை கோட்டை வீடு சுற்றுலா மையம் ஆக்கப்படும்.* உத்திரமேரூர், குன்றத்தூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர்,  கீழம்பாக்கம் அரசு மருத்துவமனைகள் நவீனமயமாக்கப்படும்.* உத்திரமேரூர், மதுராந்தகம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம்,  சிட்லபாக்கம், குன்றத்தூர், மாங்காடு, கூடுவாஞ்சேரி, நந்திவரம், திருநீர்மலை,  முடிச்சூர், பொழிச்சலூர் ஆகிய ஊர்களில் பாதாள சாக்கடை திட்டம்  நிறைவேற்றப்படும்.* குன்றத்தூரில் சுற்றுச்சாலை அமைக்கப்படும்.* ஸ்ரீபெரும்புதூரில் இராமானுஜருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்.* ஸ்ரீபெரும்புதூரில் குளிர்பதனக்கிடங்கு வசதிகள் அமைத்துத் தரப்படும்.* காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி ெதாடங்கப்படும்.* வாலாஜாபாத்தில் மீன் சந்தை அமைக்கப்படும்.* தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் காரப்பேட்டையில் விபத்து சிகிச்சை  பிரிவுடன் அரசு மருத்துவமனை கட்டப்படும்.* காஞ்சிபுரம் அரசு மருத்துவனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம்  உயர்த்தப்படும்.* அனாகபுத்தூரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படும்.*  திருக்கழுக்குன்றத்தில் பால் கொள்முதல் மையம் அமைக்கப்படும்.* மெட்ரோ ரயில் சேவை பழைய மாமல்லபுரம் சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு  விரிவுபடுத்தப்படும்.* சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்குகடற்கரை சாலை பழைய  மாமல்லபுரம் சாலை ஆகியவற்றில் தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கட்ட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.* கீழாம்பி, திருமுக்கூடல் ஆகிய ஊர்களில் நெல்கொள்முதல் மையங்கள்  அமைக்கப்படும்.* பாலாறு குடிநீர்  திட்டம் மறைமலைநகரின் அனைத்து பகுதிகளுக்கும்  விரிவுபடுத்தப்படும்.* முட்டுக்காடு சுற்றுலா மையம் தரம் உயர்த்தப்படும்.* காஞ்சிபுரத்தில் காகித ஆலை தொடங்கப்படும்.* காஞ்சிபுரத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.* காஞ்சிபுரம் கூட்டுறவு நூற்பாலையை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.* வேடதாங்கல் பறவைகள் சரணாலயம் மேம்படுத்தப்பட்டு சர்வேதச சுற்றுலா  மையமாக்கப்படும்.மேலும் பறவைகள் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கப்படும்.* நெம்மேலியில் மீன்களை சேகரித்து பாதுகாப்பதற்காக குளிர் பதன கிடங்கு  அமைக்கப்படும்.* செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மாங்காடு நகருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும்.* ஆலந்தூர் தொகுதியில் 10 ஊராட்சிகளில் உள்ள பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட  இடங்களில் அழகிய பூங்காக்கள் அமைக்கப்படும்.* மழைக்காலத்தில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் ஆலந்தூர்  தொகுதியில் உள்ள அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், மௌலிவாக்கம் ஆகிய  பகுதிகளில் நீர் தோங்காமல் மணப்பாக்கம் கால்வாய் வழியாக வெளியேற  நடவடிக்கை எடுக்கப்படும்.* ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கோவூர் ஊராட்சியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு  சுந்தராம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிதிலம் அடைந்துள்ள  தேருக்கு பதில் அறநிலையத்துைறயின் சார்பில் சீரமைத்து புதிய தேர்  அமைக்கப்படும்.* மணப்பாக்கம் சுடுகாட்டுக்கு ராணுவத்துறையிடம் இருந்து நிலத்தை பெற்று  சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* ஆலந்தூர் தொகுதியில் உள்ள 10 ஊராட்சிளுக்கு கூட்டுகுடிநீர் திட்டம் உருவாக்கி  குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும்.* அய்யன்தாங்கல் போக்குவரத்து பணிமனையில் தரைதளம் அமைத்து  இருக்கைகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்.* ஆலந்தூர் தொகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ெகருகம்பாக்கம்,  மணப்பாக்கம் சாலையையும், கோவூர், பரணிபுத்தூர் சாலையையும் அகலப்படுத்தி  போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* ஆலந்தூரில் கிறித்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இறந்தவர்களை அடக்கம்  செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.* கைத்தறி நெசவாளர்களுக்கு மழைகாலங்களில் தறிக்குழிகளில் தண்ணீர் வந்து  விட்டால் தொழில் செய்ய முடியாமல் சிரமப்படும் நிலையை போக்கிட மழைக்கால  நிவாரண உதவி தொகை வழங்கப்படும்.* ஆலந்தூர் தொகுதி நந்தம்பாக்கத்தில் மத்திய அரசின் ஐடிபிஎல்க்கு சொந்தமான  நிலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.* கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட ஆலந்தூர் தொகுதி திரிசூலம்,  தலக்கணாஞ்சேரி பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை  சுத்திகரித்து பொதுமக்களுக்குவழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.* ஆலந்தூர் தொகுதி மாதவபுரத்தில் மழைக்காலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை  வெளியேற்ற கத்திபாரா பாலம் அருேக ஜிஎஸ்டி சாலையில் இரண்டு சிறிய  பாலங்கள் அமைத்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.* ஆலந்தூர் தொகுதி பழவந்தாங்கல், தில்லை கங்கா நகரில் மேம்பாலங்கள்  அமைக்கப்படும்.* மதுராந்தகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.* வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் நிலம் பாதுகாக்கப்படுவதுடன்  சர்வதேசப் பறவைகளும் சுற்றுலா பயணிகளும் வருகை புரிந்திடும் வகையில்  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.* செங்கல்பட்டில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.* செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம்  உயர்த்தப்படும்.* பழவேலி-பாலாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.* ஒரகடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட ஆவண செய்யப்படும்.* தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.* சிங்கபெருமாள் கோயில் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.* வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இணைக்கப்பட்டு நகராட்சியாக மாற்றப்படும்.* பாலாற்றில் இருந்து மதுராந்தகத்திற்குக் குடிநீர் வழங்க நடவடிக்கைகள்  எடுக்கப்படும்.* மதுராந்தகத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.* மெட்ரோ ரயில் சேவை மீனம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வரை நீட்டிக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.* பறக்கும் ரயில் சேவை வேளச்சேரியில் இருந்து தாம்பரத்திற்கு நீட்டிக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.* வேளச்சேரி – தாம்பரம் முதன்மை சாலையில் மேடவாக்கம் சந்திப்பிலும்,  வண்டலூர் சாலை-ராஜீவ் காந்தி சாலை சந்திப்பிலும், முகாம் சாலை சந்திப்பிலும்  மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.* கேளம்பாக்கம் ஊராட்சியில் ராஜீவ் காந்தி சாலையில் இருந்து வண்டலூர் சாலை  வரையில் சுற்றுப்புறச் சாலை அமைக்கப்படும்.* செங்கல்பட்டில் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி  தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* காஞ்சியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி* காஞ்சி, செய்யூரில் சிப்காட் தொழிற்பேட்டைகள்* முட்டுக்காடு சுற்றுலா மையம் தரம் உயர்த்தப்படும்* மதுராந்தகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி…

You may also like

Leave a Comment

four × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi