திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

தாராபுரம்,ேம13: தாராபுரத்தில் உள்ள  ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா கடந்த 9ம் தேதி அம்மன் அழைப்பு நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தீர்த்த குட ஊர்வலம்,பொங்கல் விழா ஆகியன சிறப்பாக நடைபெற்றது. செளடேஸ்வரி அம்மன் உற்சவ விழாவை முன்னிட்டு உற்சவமூர்த்திக்கு தங்கத் தாலி, தங்க காசு, வெள்ளிவளைகள் மற்றும் சகல சீர்வரிசைகளும் படைக்கப்பட்டு தேவாங்கர் மக்களால் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவில் சாமிதுரை, சண்முகசுந்தரம்,சேசராஜ் நடராஜ், ரவிச்சந்திரன், கோவில் நிர்வாகிகள் தேவதாஸ் காந்தி, சண்முகசுந்தரம், திருமலைசாமி, ராஜேந்திரன், ஈஸ்வரன் உட்பட கோவில் நிர்வாகிகள் பலரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை