திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும்: காங்கிரஸ் பூத்கமிட்டி கூட்டத்தில் முடிவு

 

பெ.நா.பாளையம், மார்ச் 15: கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்பசாமி தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி சர்கிள் தலைவர்கள் சுரேந்திரபாபு, நாகராஜ், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சூரிய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மேலிடப் பார்வையாளர் ஈரோடு மாநகராட்சி உறுப்பினர் ரவி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசியதவாது, ‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிடுவதாக நினைத்து திமுக கூட்டணி வெற்றிக்கு பணியாற்ற வேண்டும்’ என்று கூறினர்.

இதில் எச்எம்எஸ் சங்க தலைவர் ராஜாமணி, மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சாந்தகுமார், வேலுமணி, மோகன் ராஜேந்திரன், பாலாஜி மருதகிரி, சிங்காரவேலன், ராமராஜ், நாகராஜ், செந்தில்குமார், பொன்ராஜ்தம்பி, பார்த்திபன், சூர்யா வெள்ளிங்கிரி, அசோகன், கணேசன், செல்வராஜ், பாலசுப்ரமணியம், வளர்மதி, பரமேஷ்வரன்,கோவிந்தராஜ் முத்துக்குமார், ஆறுமுகம்,கிருஷ்ணசாமி, பிரபாகரன், வடிவேல், மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு