திமுக இளைஞர் அணி மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் 72 திமுக மாவட்டம், பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களின் திமுக இளைஞர் அணி மண்டல பொறுப்பாளர்களை உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:இளைஞர் அணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெற்று தமிழகத்தின் 72 திமுக மாவட்டங்கள், பாண்டிச்சேரி-காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்கள்  9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் இளைஞர் அணி துணை செயலாளர் ஒருவர், மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட  அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டு கொள்கிறேன்.அதன்படி சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு(அந்தமான், மும்பை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்கள்) மண்டல பொறுப்பாளராக எஸ்.ஜோயல். திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு மண்டல பொறுப்பாளராக ப.அப்துல் மாலிக். காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, வேலூர் மத்திய, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, பாண்டிச்சேரி மண்டல பொறுப்பாளராக க.பிரபு நியமிக்கப்பட்டுள்ளனர்.தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு மண்டல பொறுப்பாளராக பி.எஸ்.சீனிவாசன். நீலகிரி, கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கரூர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மண்டல பொறுப்பாளராக கே.இ.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, திருவாரூர் மண்டல பொறுப்பாளராக சி.ஆனந்தகுமார். தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் மத்திய, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம் வடக்கு, நாகப்பட்டினம் தெற்கு, காரைக்கால் மண்டல பொறுப்பாளராக நா.இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு சிவகங்கை, ராமநாதபுரம் மண்டல பொறுப்பாளராக கு.பி.ராஜா (எ) பிரதீப் ராஜா. மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, நெல்லை கிழக்கு, நெல்லை மத்திய, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மண்டல பொறுப்பாளராக ந.இரகுபதி (எ) இன்பா ஏ.என்.ரகு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்