திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் புகையிலை இல்லாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

ஈரோடு, ஜூன் 1: இஸ்ரேல் அரசின் இனப் படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு, சூரம்பட்டி 4 ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் நம்புராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, பி.பி.பழனிசாமி, சி.பரமசிவம், ஏ.எம்.முனுசாமி, ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்ரமணியன், சி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினர். இதில், இஸ்ரேல் அரசு பாலஸ்தீனம் மீது இனப் படுகொலைகளை நடத்தி வருகிறது. சுமார் 36 ஆயிரம் பேர் இத்தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில், பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். மருத்துவமனைகள், உணவு கூடங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் அரசு குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்த சொல்லியும் இஸ்ரேல் அரசு தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, ரஃப்பாவின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும். சுயேட்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்