திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது; திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.  ஒரு காலத்தில் திரைப்பட தணாரிப்பில் இருந்தவன் நான். ஒரு சில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.  திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது என மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 2 ஆண்டுகாலம் கொரோனாவால் பல்வேறு துறையினர் பாதிப்படைந்தனர். அதில் திரையுலகமும் பாதிப்புக்குள்ளானது. லட்சக்கணக்கான மக்கள் திரைத்துறையை நம்பி உள்ளனர். பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும் தொழிலாகும். திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு என பேசினார். திரைத்துறையாக இருந்தாலும் செய்தித்துறையாக இருந்தாலும் தமிழ்நாடு மிக நீண்ட வரலாறு கொண்டதாகும். தொழில்துறை முன்னேற்றம் காண வேண்டும் என்ற அடிப்படையில் துபாய்க்கு சென்று வந்தேன் என கூறினார். மாநிலத்தின் உரிமைகளை உரிமையோடு கேட்க வேண்டும் என்பதற்காக தலைநகரம் டெல்லிக்கு சென்று வந்தேன் என பேசினார். இவ்வாறு தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்