தினகரன் நாளிதழ் செய்தியை துண்டு பிரசுரமாக விநியோகித்து நூதனமாக வாக்கு கேட்கும் வேட்பாளர்

சுரண்டை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொது மக்களை கவருவதற்காக வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் வித்தியாசமான முறையில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பேரூராட்சியில் 3-வது வார்டு திமுக வேட்பாளர் சீதாலட்சுமி முத்து என்பவர் தினகரன் நாளிதழில் வெளியான செய்தியை துண்டு பிரசுரமாக அச்சடித்து பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் கோரிக்கையை அரசுக்கு கொண்டு சேர்க்கும் பாலமாக தினகரன் நாளிதழ் திகழ்கிறது. எங்களது ஒவ்வொரு கோரிக்கையையும் செய்தியாக வெளியிட்டது தினகரன் நாளிதழ். அதனால் அரசின் கவனத்தை பெற்று கருங்குளம் கால்வாய்த்திட்டம், தெருவிளக்கு, சாக்கடை, வேகத்தடை அமைத்தல் போன்ற மக்களின் அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற காரணமாக இருந்தது தினகரன் நாளிதழ் செய்தி. இன்று நாங்கள் மக்களுக்கு அந்த செய்தியை ஆதாரமாக காண்பித்து வாக்கு சேகரிப்பது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. எனவே இதேபோல் சாம்பவர்வடகரை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தினகரன் நாளிதழில் வெளிவந்த கோரிக்கை செய்தி, அதனால் மக்கள் அடைந்த பலன் குறித்து பொதுமக்களிடம் காண்பித்து வாக்கு சேகரித்து வருகிறோம். நாங்கள் தொடர்ந்து உழைப்போம் என வாக்கு சேகரிப்பதற்கு எங்களுக்கு இந்த தினகரன் நாளிதழ் பாலமாக உள்ளது. சாம்பவர்வடகரையில் கருங்குளம் கால்வாய் திட்டத்தை கொ ண்டு வருவதற்கு திமுக செய்த முயற்சி மற்றும் அது நடைபெற காரணமாக இருந்தது தினகரன் நாளிதழ் செய்தி. தொடர்ந்து மக்கள் கோரிக்கைகளை செய்தியாக வெளியிட்டு வரும் தினகரன் நாளிதழுக்கு இந்த நேரத்தில் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என சீதாலட்சுமி முத்து தெரிவித்தார். அப்போது திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்….

Related posts

ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கூட்டணி முறிகிறதா? அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள் 8 பேர் திடீர் டெல்லி பயணம்

ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: திமுக சட்டத்துறை அறிவிப்பு