திதியும் அதன் துதிகளும்

பொதுவாகவே நம்மில் பலருக்கு நட்சத்திரங் களை பற்றி  மந்திர வழிபாடு  உண்டு  என்று தெரியும். திதி தேவதைகளுக்கும் வழிபாடு உண்டு என்று நம்மில் பலபேருக்கு தெரியாது. சென்ற இதழிலில் வெளியான மங்களம் தருவாள் ஸர்வமங்களா என்ற கட்டுரையில் தில்லை கங்கா நகர் ராஜராஜேஸ்வரி அம்பாளை தரிசனம் செய்வதற்கு 16 படி ஏறி சுக்ல மற்றும் கிருஷ்ண பட்சமாக திதிகளை தியானம் செய்து அகஸ்திய முனிவரின் சோடச மாலை பாடலை படித்து வணங்க வேண்டும் என்று சொன்னோம். இந்த ஆலயத்தில் மட்டும்தான் திதி தேவதைகளின் பாடல்களை நாம் காண முடியும். ஆன்மிக பலன் வாசகர்களுக்காக  அந்த  பாடல்களை  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் .அகஸ்திய முனிவரின் சோடச மாலை பூர்வ பக்ஷம் – சுக்லபக்ஷம் (ஏறும்பொழுது) வளர்பிறைஅமாவாசை – ஸ்ரீத்வாரதேவதா தேவிஅம்மாவசி தானான அரூபித் தாயேஅகண்டபரிபூரணியே யமலை சக்திநம்மாலே பாடரிது நினதுபேரைநாவிலே வந்தருள்செய் நாயே னுக்குத்தம்மாலே சோடசதோத் திரம் விளங்கத்தயவுசெய்து நின்பதத்தில் தரிப்பாய் தேவிசும்மாநீ இருக்காதே கண்பார்த் தாள்வாய்சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே !பிரதமை – ஸ்ரீ காமமேஸ்வரிதேவிபிரதமையில் பிரவிடையாய்க்    கலைவே றாகிப்பின்கலைவிட் டிடகலையில் பிறந்த                     கன்னிஉறவாகி ரவியைவிட் டகலாத நின்றஉமையவளே என்பிறவி ஒழியச்                       செய்வாய்இறவாத வரத்துடனே ஏமம் வாமம்எட்டெட்டுஞ் சிந்திக்க எனக்குத் தந்துசுருதியிலே வந்தருள்செய் அடியே னுக்குச்சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!துவிதியை – ஸ்ரீ பகமாலினிதேவிதுரிகையென்றும் உபயமென்றும்     இடைபின் என்றுஞ்சுவர்க்கமென்றும் நரகமென்றுஞ்     சொல்லக் கேட்டுமதிரவியா யடிமுடியாய் உயராண்     பெண்ணாய்வாழ்வாகித்தாழ்வாகி வழுங்குந் தாயேவிதிதொலைந்து வினைதொலைந்து வெட்கங் கெட்டுவீம்புயம் ஆசை துக்கம் விட்டே யோட்டுசுதன் முகம்பார் மதிமுகத்தால் சூடசாசூட்சிசோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!த்ரிதியை – ஸ்ரீ நித்யக்லின்னாதேவிதிரிதிகையில் அசுத்தமற்றுச் சுத்தமாகிச் சிற்சொரூபத் தனைச் சேர்ந்த தெளிவே கண்டுஉறுதியுடன் உனதுபதம் அகலாச் சிந்தைஉறவு செய்வாய் உம்பரையே உமையே தாயேஅறுதியாய்இகத்தாசை அகன்ற ஞானஆனந்த வாசையைத்தா அடியேனுக்குச்சுருதியிலே மனமிருகக்கத் துணைசெய் தாயேசோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!சதுர்த்தி – ஸ்ரீ பேருண்டாதேவிசதுர்த்தியிலே நாதவிடைவாம பூசைதரவேணுந் தயவாக அடிமை செய்யமதித்தபடி வரமருள்வாய் வாம ரூபிவான் வெளியே வாசியே மௌனத்தாயேபதித்துன்றன் பதத்திலென்றன் சென்னி தன்னைப்பரிதிமதிஅகன்றாலும் அகலா மற்றான்துதித்தபடி நின்சரண மெனக்குத் தந்தாள்சோதியே மனோன்மணியே சுழினை     வாழ்வே!பஞ்சமி- ஸ்ரீ வன்ஹிவாசினிதேவிபஞ்சமியில் பெற்றெடுத்தாய் சேயேன் றன்னைப்பால்கொடுத்துப் பதநடனஞ் செய்தாய் தாயேகொஞ்சமொரு காரியத்தில் தவக்கஞ்செய்தால்குழிப்பயிருங் கூரையின்மேல் ஏறுமோ தான்தஞ்சமென நின்பொற்றாள் சார்த்த மைந்தன்சாக்கிரத்துக் கப்பால்நின் றாறி ணைக்குள்துஞ்சியுந்துஞ் சாதிருக்க ஏணி தந்தாள்சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!சஷ்டி- ஸ்ரீ மஹாவஜ்ரேஸ்வரி தேவிசஷ்டியெனுஞ் சடாக்கரத்துள்      சதாசி வத்துள்சைதன்ய போதத்துள் தானே தானாய்அஷ்டதிக்கின் அன்பர்களும் பெரியோர் வானோர்அயனரியும் அரன்முதலோர்      அர்ச்சித்தார்கள்கிட்டுமோ வுனைத்துதிக்க புலைநா யேற்குக் கிடைத்ததுதான் உன்னுடைய கிருபையாலேசுட்டியுடன் ரவிமதியுங் கலந்து மின்னுஞ்சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!சப்தமி- ஸ்ரீ சிவதூதிதேவிசப்தமியாஞ் சபையினுள்ளே கடலேழ் சூழசப்தரிஷி சப்தகன்னி தணிந்து போற்றஅத்தரிட பாகமதில் முக்கோ ணத்துள்அமர்ந்திருந்த பேரின்ப ஆதித் தாயேஇத்தனைநாள் படுந்துயரங்காணா      தார்போல் இருந்துவிட்டால் யார் தீர்ப்பார் எனை நீ கண்பார்சுத்தமதி ரவிகலந்து வொளியாய் மின்னுஞ்சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!அஷ்டமி- ஸ்ரீ த்வரிதாதேவிஅஷ்டமியாம் அஷ்டகலை அஷ்டநாகம்அஷ்டகிரி அஷ்டகெஜம் அஷ்ட பாலர்இஷ்டமுடன்அஷ்டதுர்க்கி அஷ்ட கும்பம்ஏற்றமாம்அஷ்டவயி ரவரு மானாய்திட்டமுடன்மெய்யன்பர் பெரியோர் வானோர்செல்வியே அஷ்டசித்தி தெவிட்டாத் தேனேதுஷ்டருக்கும் இஷ்டருக்குத் தாயாய் நின்றசோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!நவமி- ஸ்ரீ குலசுந்தரிதேவிநவமியெனும் நவரத்ன கிரீடஞ் சூட்டிநவகோடி நாதருனைப் பணிந்து போற்றதவம் பெருகும் ஒரு நான்குக் கப்பாலீர்த்துத்தற்சாத்தாய் பிள்ளைகளைத் தயவு வைத்துச்சிவபதமுஞ் சிவவெளியுத்      தெரிசித் தார்கள்.சிவகாமி நின்னுடைய செயலினாலேசுதனெனக்கும் அப்படியே அருள்செய் தாயேசோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!தசமி- ஸ்ரீ நித்யாதேவிதசமியெனுஞ் சாக்கிரத்துக் கப்பா லேறிச்சிலம்பொலியும் நினதுதிருத் தாளுங்கண்டுநிசமான தூலசூக் குமத்தோ டொன்றிநிஷ்களத்தில் உன்னுடன் நான் ஒன்றேயாகிஅசையாத ஆனந்த மயமாய் நிற்கஅருள் புரியாய் வரமருளா னந்த ரூபிசுசிகாமாய்ப் பிள்ளைமுகம் பார்த்தாட் கொள்வாய்சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!ஏகாதசி- ஸ்ரீ நீலபதாகாதேவிஏகாதசி ஆனமிவர் தந்த னக்குள்இருக்குமுனை யடையமயிர்ப் பால மீதில் சாகாத கால்வழியே ஏறி நின்றுதப்பாமல் பிடித்தபின்பு எங்கே போவாய்வேகாத தலையை விட்டு வெளியில் செல்ல வேறுகதி உனையல்லால் எனக்கிங் குண்டோதோகாயென் னுள்ளிருந்து சுதனைக் காப்பாய்சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!துவாதசி – ஸ்ரீ விஜயாதேவிதுவாதசி யானவிரு மாவும் ஒத்துச்சுணைகடந்து அணைகடந்து துவாத சாந்தம்துவாதசி யொடுங்கிநின்ற மூல ஞானம் சுருதிமுடி விடமெனக்குச்சொல்லு மம்மாதுவாதசியால் கேசரத்து ளாடி நின்ற சுந்தரநற் சௌந்தரியே சொரூபத்தாயேதுவாதசி யான பன்னிரண்டு மொன்றாஞ்சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!திரயோதசி – ஸ்ரீ ஸ்ரவமங்களாதேவிதிரயோதசி யானதொரு இடையின் மையம்சேர்ந்தாறா தாரமதில் வேரு மூன்றிகுறியாகும்ஆக்கினையைக் கடந்து மேவிகுருவாகிக் குருபதத்தில் குறிக்கும் அம்மைஅறிவை அறி வாலறிந்தே அநுபவத்திவ்வறிவொடுங்கும்பாகமதைஅருளிச் செய்வாய்துறவுதனை மனமடையத் துணைசெய் தாயேசோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!சதுர்த்தசி- ஸ்ரீ ஜ்வாலாமாலினிதேவிசதுர்த்தசி யானபதினான்காய் நின்றதற்பரத்தி சிற்பரத்தி தாயும் நீயேகுதித்தோடிப் போகாமல் எட்டில் ேசர்ந்துகும்பகமாய்த் தம்பணத்துள் கூட்டி யாடிவிதியான பிரமலபி வளர வென்றும்விளங்குவுமே செய்வதுதான் விந்தை தாயேதுதிக்கறியாப் பாலனெனைக் காத்தல் வேண்டும்.சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!பௌர்ணமி- ஸ்ரீ சித்ராதேவிபௌரணையாய்க் கலைகள் பதி னாறுமாகிப்பார்நிறைந்து மதிவதனப் பால ரூபிசவரணையாய் உலகனைத்துந் தாங்குஞ் சக்திதற்பரத்தி சிற்பரத்தி சராச ரத்திநவரத்ந பீடத்தில் நிறைந்து நின்றநாற்பத்துமுக்கோண நவர சக்திசுவரனையாய் கனகசபை தன்னில் வாழும் சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!ஆலயத்திற்கு வரமுடியாத அன்பர்கள் இல்லத்திலிருந்தே திதி தேவதைகளை மனத்தில் தியானம் செய்து அம்பாளின் அருளை பெறலாம். அடுத்த இதழில் அமர பட்சம் – கிருஷ்ண பட்சம்  இறங்கும் பொழுது  தேய்பிறை  பாடல்களை பார்ப்போம். இவ் ஆலயத்தில் வசந்த நவராத்திரி 12.4.2021 முதல் 24.4.2021 வரை சிறப்பாக நடைபெறுகிறது. நவாராண பூஜை, ஹோமம், மஹா சண்டிஹோமம், புஷ்ய யாகம் போன்றவை இந்த நிகழ்ச்சியில் நடைபெறும்…குடந்தை நடேசன்…

Related posts

கலை மணம் கமழும் கிருஷ்ணர் கோயில்

சிக்கல்களைத் தீர்க்கும் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு!!

கஷ்டங்கள் தீர நன்மைகள் கிடைக்க சாய்பாபா வழிபாடு..!!