திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

திண்டுக்கல் ஜூலை 12: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில் வருவாய் துறை சம்மந்தமான கோரிக்கை மனுக்களுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் (ஊரகம்) என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சரால் நேற்று துவங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 68 முகாம்கள் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாம்களில் வருவாய் துறை சம்மந்தமான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

அதனடிப்படையில் பட்டாவில் பெயர் மாற்றம், பட்டா உட்பிரிவு சேவையை பெற ஆதார் அட்டை, கிரைய பத்திரம், வில்லங்க சான்றிதழ், வீட்டுமனை வரைபடம் மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்களயும், பட்டா, சிட்டா நகல் சேவையை பெற ஆதார் அட்டை, விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது ஆகிய ஆவணங்களையும், நில அளவீடு (அத்து காண்பித்தல்) சேவையை பெற அரசு கணக்கில் பணம் செலுத்திய சலான் நகல், பட்டா நகல், கிரைய பத்திரம், வில்லங்க சான்றிதழ் மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்களையும், வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்வி சான்று, ஊதிய சான்று மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்களையும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற குழந்தை பிறந்த மருத்துவமனையில் பெற்ற ஆவணங்கள், இறந்தவரின் ஆதார் அட்டை, தாய் தந்தையரின் ஆதார் அட்டை,

வாரிசுதாரரின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆவணங்களையும், முதியோர் உதவித்தொகை பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வறுமைக்கோட்டு பட்டியல் எண், வங்கி கணக்கு புத்தகங்களையும், விதவை உதவித்தொகை பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வறுமைக்கோட்டு பட்டியல் எண், கணவரின் இறப்பு சான்று, வங்கி கணக்கு புத்தகங்களையும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களையும், கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்று, வங்கி கணக்கு புத்தகங்களையும், முதிர் கன்னி உதவித்தொகை பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா