திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்-சேவைகள் பாதிப்பு

திண்டுக்கல் : பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து திண்டுக்கல்லில் அனைத்து வங்கி கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திண்டுக்கல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மண்டல செயலாளர் வேல்முருகன் தலைமை வைத்தார். அனைத்து வங்கி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர் சங்க உதவி பொது மேலாளர் ஜோன் கிங்ஸ்டன் சிறப்புரையாற்றினார்.இதில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், தனியார் கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வாங்கிய கடனை கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய முதலாளிகளிடம் இருந்து பணம் வசூலிக்க அரசு நடவடிக்கை வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.அகில இந்திய அளவில் இரண்டு நாட்கள் போராட்டத்தால் அனைத்து வங்கிகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 200 வங்கிகள் உள்ளன. இதில் 4000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஒட்டுமொத்தமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் ரூ.500 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதித்துள்ளது.கொடைக்கானல்வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கொடைக்கானலில் கனரா வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கனரா வங்கி அலுவலர்கள் சங்கத்தின் இணை பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இந்த சங்கத்தின் மண்டல செயலாளர் காமாட்சி ராஜா, மண்டல தலைவர் அப்துல்லா, துணை பொது செயலாளர் தர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல குழு உறுப்பினர் விஜய் யுவேந்தர் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்….

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை