திண்டுக்கல் மாவட்டத்தை பசுமையாக மாற்ற அதிகளவில் மரக்கன்றுகள் நடுங்கள்-தன்னார்வலர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் விசாகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் வனம் மரங்களின் பரப்பை அதிகரித்து பசுமை போர்வையை மேம்படுத்தும் நோக்கிலும், வனப்பகுதிகள் மட்டுமின்றி வனத்திற்கு வெளியே இருக்கும் காலி இடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகளை சில அமைப்புகள் சிறப்பான முறையில் செய்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தை பசுமை சூழல் நிறைந்த மாவட்டமாக மாற்றும் வகையில் அதிகளவில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை வழங்கினால் நட்டு பராமரிப்பதற்கும் மற்றும் இதுதொடர்பான பணிகளை சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்வதற்கு உதவி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் 7598866000 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தங்கள் விபரம் மற்றும் அலைபேசி எண்ணை அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.மரக்கன்று நடும் இடங்களில் ஆய்வுதிண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகளை திண்டிமாவனம் குழுவினர் மற்றும் சில அமைப்புகள் சிறப்பான முறையில் செய்து வருகின்றன. குறிப்பாக எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி, ரெண்டலபாறை, அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம் மற்றும் பொன்னிமாந்துறை ஆகிய இடங்களில் மரங்கள் வளர்க்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். மரங்களை பராமரிக்கும் பணிகள் குறித்து திண்டிமாவனக் குழுவினரிடம் கேட்டறிந்தார். மேலும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்கு சேவ மனப்பான்மையுடன் உள்ள சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து மரங்கள் நடும் பணிகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. ஆய்வின்போது, திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் உடன் இருந்தார்….

Related posts

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு