திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க 16 இடங்கள் அறிவிப்பு

திண்டுக்கல், செப்.15: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்திண்டுக்கல், செப்.15: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் உள்ளது. ரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசுப்படுகின்றன. எனவே, களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

இத்தகைய சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம். ரசாயன வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும். அரசினால் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் கோட்டைக்குளம், நத்தம் அம்மன்குளம், வத்தலக்குண்டு கண்ணாப்பட்டி ஆறு, நிலக்கோட்டை அணைப்பட்டி வைகை ஆறு, பழனி சண்முகாநதி, ஒட்டன்சத்திரம் தலைக்குத்து அருவி, கொடைக்கானல் டோபிகானல், வேடசந்தூர் குடகனாறு,

வடமதுரை நரிப்பாறை, குஜிலியம்பாறை பங்களாமேடு குளம், கன்னிவாடி மச்சகுளம், சின்னாளப்பட்டி தொம்மன்குளம், தாடிக்கொம்பு குடகனாறு, பட்டிவீரன்பட்டி மருதாநதி அணை, எரியோடு நந்தவனக்குளம், சாணார்பட்டி மதனக்குளம் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் மேலே கூறப்பட்ட இடங்களில் மட்டுமே ரசாயன வண்ணம் பூசப்படாத சிலைகளை கரைக்கவும், விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடவும் வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்