திண்டுக்கல் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

 

திண்டுக்கல், ஜூன் 16: திண்டுக்கல்லில் உள்ள சிவாலயங்களில் நேற்று பிரதோஷ வழிபாடுகள் நேற்று நடைபெற்றன. இதையொட்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரர், மூலவர் பத்மகிரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிர், மாவு, மஞ்சள் பொடி, இளநீர், பன்னீர், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல் திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி திருகாமேஷ்வரர் கோயில் உள்பட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை