திண்டுக்கல் கோட்டைக்குளம் அருகே தொட்டியில் குவிந்த குப்பைகள் அகற்றம்

திண்டுக்கல், டிச. 3: திண்டுக்கல் கோட்டைக்குளம் அருகே உள்ள தொட்டியை தூர்வாரி மாநகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தனர். திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் முன்பு, கோட்டைக்குளம் அருகே மாநகராட்சி கட்டுப்பாட்டில் தொட்டி ஒன்று உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று இந்த தொட்டியில் ஏராளமான விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த தொட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இதன் காரணமாக தொட்டியில் உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், நகர் நல அலுவலர் (பொ) செபாஸ்டின், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, ரெங்கராஜ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் தொட்டியில் கிடந்த குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்தினர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்