திண்டுக்கல் அருகே 1,250 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

 

திண்டுக்கல், செப்.11: திண்டுக்கல் பழைய கரூர் ரோடு அருகே உள்ள கொத்தம்பட்டி பகுதியில் ரேசன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதில் கொத்தம்பட்டி மயானத்திற்கு பின்புறம் திறந்தவெளியில், 25 மூட்டைகளில் 1250 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலன் (50) என்பவரை போலீசார் கைது செய்து, ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், குட்டியபட்டி பிள்ளையார் நத்தம் மற்றும் புதுப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து கால்நடை தீவனத்துக்கு விற்பதற்காக மயானத்திற்கு பின்புறம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரண நடத்தி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்