திண்டுக்கல்லில் ரூ.17.84 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.17.84 கோடியில், ஒருங்கிணைந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி முகாம்களை ஒருங்கிணைத்து 321 புதிய வீடுகளுடன் கூடிய புதிய முகாமினை அமைக்க ஏதுவாக தோட்டனூத்து கிராமத்தில் 3.05 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான நிதியும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து ரூ.17 கோடியே 84 லட்சத்து 48 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 321 புதிய வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, செஞ்சி மஸ்தான்,  எம்பி., வேலுச்சாமி, எம்எல்ஏக்கள் செந்தில்குமார், காந்திராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி  பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  ‘ஒருங்கிணைந்த இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் 321 வீடுகள் மற்றும் இதர அடிப்படை வசதிப் பணிகள் எட்டு மாதங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது….

Related posts

மருத்துவ உபகரணங்கள், 100 படுக்கைகளுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹40 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

மாநகர பேருந்தில் ₹200 கொடுத்து டிக்கெட் கேட்ட பயணியை தாக்கிய கண்டக்டர்:  தாம்பரம் அருகே பரபரப்பு  சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது