திண்டுக்கல்லில் பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு தொகை, சான்றிதழ் வழங்கல்

திண்டுக்கல், ஜூலை 28: திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் 58 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதில் வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி மோனிஷா முதல் பரிசும், பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் ராஜாஜி இரண்டாம் பரிசும், திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி தேன்மொழி மூன்றாம் பரிசும் பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசு பிரிவில் செட்டிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி அழகுதீபா மற்றும் திண்டுக்கல் அரசு மாதிரி பள்ளி 11ம் வகுப்பு மாணவி தேவதர்ஷினி சிறப்பு பரிசும் பெற்றனர். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியில் 21 பேர் கலந்து கொண்டனர்.

இதில் பழநி அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரி முதுகலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் நாக அர்ஜுன் முதல் பரிசும், திண்டுக்கல் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழக முதுகலை கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவி கன்யாஸ்ரீ இரண்டாம் பரிசும், கொடைக்கானல் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி காவியா மூன்றாம் பரிசும் பெற்றனர். பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5,000ம், இரண்டாம் பரிசு ரூ.3,000ம், மூன்றாம் பரிசு ரூ.2,000ம், அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பிரிவில் சிறப்பு பரிசாக ரூ.2,000 காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் இளங்கோ முன்னிலையில் வழங்கப்பட்டன.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை