திண்டுக்கல்லில் பாஜ எம்பியை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூன் 14: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மருதநாயகம் கான்சாகிப் மக்கள் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். தாயக மக்கள் கட்சி தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ் தேச மக்கள் முன்னணி பாண்டியன், தமிழரசு கட்சி காஜா, தாய் நாடு மக்கள் கட்சி பூமி ராஜன், திராவிட இயக்க தமிழர் பேரவை ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாஜக எம்பியை கைது செய்ய வேண்டும், டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்