திண்டுக்கல்லில் கந்தூரி விழா

திண்டுக்கல், செப். 18: மிலாடி நபி தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் நடந்த கந்தூரி விழாவில் 1300 கிலோ அரிசி, காய்கறிகளை கொண்டு நெய் சாதம் மற்றும் தால்சா சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  திண்டுக்கல் முகமதியாபுரம் ஈதுகா திருமண மண்டபத்தில் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய அமைப்பின் சார்பாக கந்தூரி விழா நேற்று நடைபெற்றது.

இதற்காக 1300 கிலோ அரிசி, காய்கறிகளை கொண்டு நெய் சாதம், மற்றும் தால்சா சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேகம்பூர், பூச்சிநாயக்கன்பட்டி, அசனாத்புரம் யூசுபியா நகர் மற்றும் பிஸ்மி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்