திண்டுக்கல்லில் கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மார்ச் 1: திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஏஐடியுசி கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாலன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். கவுரவ தலைவர் துரை சந்திரமோகன், சிபிஐ மாவட்ட செயலாளர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர் மத்திய சட்டம், நல வரி வசூல் சட்டங்களை கலைக்க கூடாது.

நலவாரிய மூலமாக மருத்துவ இஎஸ்ஐ வசதி காப்பீடு, பிஎப் பலன்களை வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயது ஆண்களுக்கு 60 வயது நிறைவடைந்த தேதியில் இருந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீபாவளி பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 பரிசு பணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் செல்வி, போதுமணி, ஜேசுராஜ், ஜான்மோகன் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்