திண்டுக்கல்லில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், அக். 4: திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட கவுன்சில் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், விவசாயிகள் விரோத கொள்கை கண்டித்தும் மற்றும் மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமான மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் ஏஐடியுசி. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜாங்கம், எச்எம்எஸ் சங்க மாவட்ட செயலாளர் சையது இப்ராகிம், ஐஎன்டியுசி சார்பாக மாவட்ட துணை செயலாளர் உமாராணி, ஏஐசிசிடிய சார்பாக மாவட்ட நிர்வாகி ரவி, சிஐடியு மாவட்ட தலைவர் கே.ஆர்.கணேசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நிக்கோலஸ், பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பஜூலுல் ஹக், தொமுச நிர்வாகிகள் ராஜேந்திர குமார், சென்ராயன், செந்தில் பாலு பெரிய காமு ராமமூர்த்தி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்பாட்ட்டத்தில் பலர் கருப்பு சட்டை அணிந்து வந்து மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு