திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து

 

திண்டிவனம், அக். 23: திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்தனர். சென்னை குன்றத்தூர் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு டாட்டா ஏசி வேன் மூலம் அதே பகுதியை சேர்ந்த 9 பேரை ஏற்றிக்கொண்டு, அரியலூரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் புருஷோத்தமன்(30) என்பவர் ஓட்டி சென்றார். திண்டிவனம் மரக்காணம் கூட்டு ரோடு அருகே, பைபாஸ் சாலையில் சென்றபோது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் சாலை ஓரம் இருந்த தடுப்புக் கட்டையில் வேன் மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்ததையடுத்து அவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: இதேபோல் கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஃபிளைவுட்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னைக்கு சென்றது.

மயிலம் அடுத்த பாலப்பட்டு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை ஓரம் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி சாலையில் கவிழ்ந்ததில் பின்னால் வந்த கார் ஒன்று லாரி மீது மோதியதில், காரில் பயணம் செய்த 4 பேர் லேசான காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீசார், லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்