திங்கள்சந்தையில் மினி டெம்போ மோதி மின்வாரிய ஊழியர் படுகாயம்

திங்கள்சந்தை, செப்.18: ஐரேனிபுரம் அருகே உள்ள பரம்பன்கரை, கைதைகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (54). இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது பார்வதிபுரம் மின்சார வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திங்கள்நகர் ரவுண்டானா தாண்டி கருங்கல் ரோட்டில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த மினி டெம்போ மோகன்குமார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு வலது கால், வலது கை, இடது கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த மோகன்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு களியங்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மோகன்குமார் மனைவி ரஜினிகலா (52) இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விபத்து ஏற்படுத்திய மினி டெம்போ டிரைவர் குருந்தன்கோடு வீரவிளையை சேர்ந்த ஜஸ்டின் (41) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு

வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அரசு ஊழியர் ரூ.10 லட்சம் நூதன மோசடி: போலீசார் வழக்குப்பதிவு