தா.பழூர் அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது

தா.பழூர், செப் 24: அரியலூர் அருகே அரசு பஸ் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபடட் இருவர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தலைமறைவாகினர். இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே நடுவலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(42). இவர் ஜெயங்கொண்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து சுத்தமல்லி செல்லும் அரசு பேருந்தில் பயணிகளிடம் டிக்கெட் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அணைக்குடம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அரசு பேருந்து புறப்பட்டு தா.பழூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சிந்தாமணி காலனி தெருவை சேர்ந்த மாதேஷ்(26), மணிவண்ணன்(24), தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த அபின்குமார், வல்லரசு, கபினேசன் ஆகிய 5 பேரும் பேருந்தை வழிமறித்து ஏறியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் படியில் பயணம் செய்துள்ளனர். அப்போது கண்டக்டர் விஜயகுமார் படியில் பயணம் செய்யக்கூடாது என அவர்களை எச்சரித்து, டிக்கெட் எடுக்க கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து கண்டக்டர் விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தா.பழூர் காவல் நிலையத்தில் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா வழக்குப்பதிவு செய்து மாதேஷ், மணிவண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் தலைமறைவான 3 நபர்களையும் தேடி வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி