தாவ தயாராக இருக்கும் இலை எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாஜி அமைச்சரின் மவுனத்தால் அதிருப்தியில் நிர்வாகிகள், தொண்டர்கள் இருப்பதாக சொல்கிறார்களே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர   மாவட்ட இலை கட்சியின் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ தற்போது சேலத்துக்காரர்   அணியில் இருந்து வருகிறார். இலைகட்சியில் தேனிக்காரர் மற்றும்   சேலத்துக்காரர் என இரு அணிகளாக பிரிந்த பிறகு மாஜி அமைச்சர் சேலத்துக்காரர்   அணியில் ஐக்கியமானார். ஆனால், சொல்லும்படி பெரிய அளவில் ரியாக்ஷன்   எதுவும் இல்லாமல் சைலண்டாக மணியானவர் இருந்து வருகிறாராம்… பெரும்பாலும்   வீட்டை விட்டு வெளியே வருவது கிடையாதாம்… கட்சியின் முக்கிய   நிர்வாகிகளிடம் பேசுவது கிடையாது. தொண்டர்களையும் சந்திப்பது கிடையாதாம்…   அந்த அளவுக்கு சைலண்டாக இருந்து வருகிறாராம்… நிர்வாகிகளை விட தொண்டர்கள்   தான் மாஜி அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்களாம்… ஆனால்,   அடிக்கடி தலைநகருக்கு ரகசியமாக சென்று வருகிறாராம்.. முக்கியமாக, தேனிக்காரர் பற்றி எந்தவித விமர்சனமும் செய்யாமல் கவனமாக இருந்து வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நாகர்கோவிலில் நடந்த, குமரி  மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சலசலப்பாமே…’’‘‘ஆமா..  இக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சிலர் குமரி  மாவட்ட கூட்டுறவு  சங்கங்களின் இணைபதிவாளர் பேசுவது  ஒன்றாகவும், செயல்பாடு மற்றொன்றாகவும்  உள்ளது. நாங்கள் விவசாயிகள்  கூட்டத்தில் எத்தனையோ அதிகாரிகளை  பார்த்துள்ளோம், ஆனால் இதுபோன்ற ஒரு  அதிகாரியை இதுவரை பார்த்ததே இல்லை  என்று கலெக்டர் முன்னிலையில் காரசாரமாக  குற்றச்சாட்டுகளை  கொட்டித்தீர்த்தனர். அந்த அதிகாரியின் செயல்பாடும்  அப்படித்தான் என்று  கூறும்விதமாக அதிகாரிகள் யாரும் அவருக்காக பேசவும்  முன்வரவில்லை.  அடுத்தடுத்த கூட்டங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள்  கூறப்பட்டபோதிலும்  அதனை கண்டுகொள்ளாமல் விவசாயிகளின் கேள்விகளுக்கு  மழுப்பலான பதிலை  கூறிவிட்டு குற்றச்சாட்டுகளுக்கு உரிய நடவடிக்கை  எடுக்காமலும் கூட்டுறவு  சங்கங்களின் இணைபதிவாளர் கடந்துபோவதுதான்  விவசாயிகளை கடுப்படைய  செய்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலையை நம்பி காத்துக்கிடக்காமே தாமரை கட்சி…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தேசிய கட்சியினர் அனைவரும் இலை கட்சியின் முடிவை தான் எதிர்பார்த்து  காத்திருக்கிறார்களாம். கடந்த சட்டசபை தேர்தலில் அந்த கட்சியின் தோளில் ஏறி  நின்று தான் அல்வா தொகுதி உட்பட நான்கு தொகுதிகளில் தேசிய கட்சி  வெற்றிக்கொடி நாட்டியதாம். தற்போது இலை கட்சி தேனிக்காரர், சேலம்காரர் என  இரண்டு பட்டு கிடக்கும் நிலையில் தேசிய கட்சியின் மாநில தலைமையோ எடுத்தோம்,  கவிழ்த்தோம் என்ற போக்கில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்ற  ரீதியில் பேசி வருகிறதாம். இதனால் மக்களவை தேர்தலில் போட்டியிட நினைத்த  தேசிய கட்சியின் பிரபலங்கள் பலர் பின் வாங்கி நிற்கிறார்களாம். தமிழகம்  போன்ற மாநிலங்களில் தனித்துப் போட்டியிட்டு டெபாசிட்டை பறி கொடுத்தால்,  நமது இமேஜ் சரிந்து விடும். அதையெல்லாம் யோசிக்காமல் மாநில தலைமை பேசி  வருவது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறதாம். அல்வா தொகுதியில்  போட்டியிட்டு எப்படியும் அமைச்சராகி விட வேண்டும் என தேசிய கட்சியின்  எம்எல்ஏ கணக்கு போட்டுள்ளாராம். அவரது ஆசை நிறைவேறுமா, நிராசையாகுமா என்பது  இலை கட்சியின் முடிவில் தான் உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘சம்திங் கொடுக்கலைன்னா.. ஆவணங்களை ஆன்லைன்ல பதிவேற்றம் ெசய்றதில்லையாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டத்துல, நன்னன் நகரத்துல தலைமை லேண்டு சர்வேயர்  டிபார்ட்மெண்ட் இருக்குது. இந்த டிபார்ட்மெண்ட்ல எந்த வேலையா இருந்தாலும்,  ஆரம்பமே கே கிடையாதாம். எல்லாமே, எல் தானாம். சம்திங் கொடுத்தாத்தான்,  பட்டா மாறுதல், நில வரைபடம் எல்லாம் கிடைக்குமாம். சம்திங் கொடுக்கலைனா  ஆவணங்கள் கொடுப்பாங்க.. ஆனா, அதை ஆன்லைன்ல ஏற்றுவது கிடையாதாம். இதனால  ஆவணங்கள் கிடைத்தும், கிடைக்காத நிலையாக இருக்குதாம். அதோட பத்திரத்துல  பிரச்னை இருக்குது. கோர்ட்டுக்கு போனாதான் முடியும்னு சொல்லி  அலைக்கழிக்குறாங்களாம். நிலப்பிரச்னையில இரு தரப்பு ஆவணங்களுக்கு  விண்ணப்பிச்சா, அதுல யாரு முதல்ல ‘கே’ கொடுக்குறாங்களோ அவங்களுக்குதான்  ஆவணங்கள் கிடைக்குதாம். சம்திங் கொடுக்க விரும்பாத பப்ளிக் மாவட்ட உயர்  அதிகாரிங்க கிட்ட புகார் செஞ்சா, எங்க துறை மாவட்ட அதிகாரிகளுக்கெல்லாம்  கட்டுப்படாதுன்னு சொல்றாங்களாம். வாங்குறதுல உயர் அதிகாரிங்களுக்கு  கொடுத்து சரிகட்டிடுறதால யாரும் கட்டுப்படுத்த  முடியாத டிபார்ட்மெண்டா  இருக்குதாம் சர்வே டிபார்ெமண்ட்டுன்னு பாதிக்கப்பட்ட பப்ளிக் புகார்  சொல்றாங்க. எனவே, கட்டுப்படுத்துற இடத்துல இருக்குற அதிகாரிங்க உரிய  நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்கு’’ என்றார் விக்கியானந்தா.‘‘பன்னீர்செல்வத்துக்கும், வைத்திலிங்கத்திற்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. சமீபகாலமாக வைத்திலிங்கம் சொல்வதை ஓபிஎஸ் கேட்பதில்லையாம். குறிப்பாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவரையும் ஓபிஎஸ் சந்திக்க வேண்டும் என்று  வைத்திலிங்கம்  ஆலோசனை கூறியுள்ளார், வைத்திலிங்கம் கூறிய ஆலோசனையை ஓபிஎஸ் தாமதப்படுத்தி நிராகரித்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் தஞ்சாவூரில் வைத்திலிங்கம்  சசிகலாவை  சந்தித்துள்ளார்.  ஆனால் ஓபிஎஸ்  இதுவரை சசிகலாவையும் தினகரனையும் சந்திக்கவில்லை.ஓபிஎஸ் அணியில் இருந்து கோவை செல்வராஜ் திமுகவில் சேர்ந்த நிலையில் வைத்திலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் ஓபிஎஸ் அணியில் அதிருப்தியாக உள்ளனர். அரசியலில் ஒரு தெளிவான முடிவை ஓபிஎஸ்  எடுக்கவில்லை என்றும் அவரை நம்பியது வீண் என்ற கருத்தும் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் தனது ஆதரவாளர்கள் பலருடன்  இதுகுறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில, சசிகலா, தினகரன் மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில் அவர்களுடன் சேர விரும்பாமல், பாரதிய ஜனதா கட்சியுடன் தனது அணியை இணைக்க ஓபிஎஸ் ரகசியமாக  காய் நகர்த்தி வருகிறாராம். இதை வைத்திலிங்கம் விரும்பவில்லை. இதனால்தான் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் இருந்து வருகிறது. ஆனால் இதை பற்றி அலட்டிக் கொள்ளாமல், பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறாராம் ஓபிஎஸ். கட்சியில் இணைந்தால் ஓபிஎஸ்சுக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

சொந்த தொகுதியில் சேலத்துக்காரர் அதிக ஓட்டு வாங்கிய ரகசியம்பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சின்ன மம்மியின் டிராவல் ஒரேயடியாக பிசுபிசுத்து போனதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

மாவட்ட செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்க தயாராகும் இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா