தாளவாடி மலைப்பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து வனப்பகுதியில் தீ விபத்து

சத்தியமங்கலம், ஏப்.10: தாளவாடி மலைப்பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. வறட்சியால் வனப்பகுதியில் அவ்வப்போது தீ விபத்துக்கள் ஏற்படுகிறது. நேற்று மதியம் தாளவாடி வனப்பகுதியில் உள்ள முதியனூர் என்ற இடத்தில் சாலையோர வனப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின்கசிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி கொடிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி அணைத்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள மின்கம்பங்களை காட்டு யானைகள் சேதப்படுத்துவதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள மின்கம்பங்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மின் கம்பங்களில் முள்கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்