தாறுமாறாக ஓடிய வேன் மோதி எலக்ட்ரீசியன் பரிதாப பலி: டிரைவர் கைது

சென்னை: எழும்பூர் நாயர் பாலம் மற்றும் காந்தி இர்வின் சாலை சந்திப்பு அருகே நேற்று முன்தினம் இரவு லோடு வேன் அதிவேகமாக வந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. இதில் சாலையில் நின்று இருந்த 53 வயது மதிக்கத்தக்க நபர் மீது மோதிவிட்டு சிக்னலுக்காக காத்திருந்த பைக் மற்றும் சைக்கிள் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்திய திருவேற்காடு பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் மூர்த்தி(53) என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த நபர் குறித்து போலீசார் விசாரித்தனர். அதில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த ரவி என்பது தெரியவந்தது….

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

பைக்கில் ரோந்து சென்றபோது போலீஸ்காரர் மீது தாக்குதல்: ஐடி ஊழியர் கைது; ரவுடி ஓட்டம்