தாய், மகன் மீது போக்சோ வழக்கு

 

சாத்தூர், அக்.7:சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவத்தில் தாய், மகன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தூரை சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு இன்ஸ்டாகிராமில் சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறிய சிவராஜ், பலாத்காரம் செய்தார். மேலும், சிறுமியை மிரட்டி அடிக்கடி பணம் பறித்துள்ளார். இதையடுத்து சிவராஜ் உடன் பேசுவதை கடந்த இரண்டு மாதங்களாக சிறுமி நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவராஜ் நேற்று முன்தினம் இரவு மது போதையில் சிறுமியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இதில் மனமுடைந்த சிறுமி கிருமிநாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் சிவராஜ், உடைந்தையாக இருந்த அவரது தாய் லட்சுமி, சகோதரி ஆகியோர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சேலத்தில் வாலிபர் இளம்பெண் மாயம்

எருமப்பட்டி வட்டாரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறி 12 ஆடுகள் பலி விவசாயிகள் பீதி

பரமத்திவேலூர் அருகே சோதனை கரும்பாலையில் பதுக்கிய 1300 அஸ்கா சர்க்கரை பறிமுதல் அதிகாரிகள் அதிரடி