தாய்க்கு மருந்து வாங்க சென்ற பாஜக இளைஞரணி தலைவர் மீது துப்பாக்கி சூடு

மெயின்புரி: உத்தரபிரதேசத்தில் தாய்க்கு மருந்து வாங்க சென்ற பாஜக இளைஞரணி தலைவரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் கவுதம் கத்தேரியா, நேற்று மாலை தனது தாய்க்கு மருந்து வாங்குவதற்காக பைக்கில் மெயின்புரிக்கு சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் மருந்துகளை வாங்கிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​போகான் – மெயின்புரி சாலையில் லாலுபூர் அருகே வந்தபோது, திடீரென அவரை வழிமறித்த இருவர், கவுதம் கத்தேரியாவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர், அந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த கவுதம் கத்தேரியாவை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதைக் கண்ட மருத்துவர்கள், அவரை ஆக்ரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மாவட்டம் முழுவதும் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரை போலீசார் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இச்சம்பவத்தால் மெயின்புரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. …

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்