தாயில்பட்டி ஊராட்சி முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு

விருதுநகர், செப்.24: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டி கிராம மக்கள் நேற்று மனு அளித்தனர். மனுவில், தாயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மண்குண்டாம்பட்டி கிராமத்தில் இரு பங்காளிகள் பிரச்சனையில் ஒருவர் மற்றொருவர் மீது வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர் பொதுப்பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக மற்றொருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து அகற்ற உத்தரவு பெற்றார். இவர் தன்னை காப்பாற்ற ஊர் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்ற நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றதாக கூறி அரசு அலுவலர்கள் அளவீடு மார்க்கிங் செய்தனர்.

அதிகாரிகள் முறையான பதில் அளிக்காத நிலையில் சிவகாசி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாகி நிலுவையில் உள்ளது. தனிப்பட்ட இருவரின் பகையால் ஊர் முழுவதும் மக்களை துன்புறுத்துவது தவறானது. 65 வீடுகள் உடைய சிறிய ஊரில் அனைவரும் ஒற்றுமையுடன் வசித்து வருகிறோம் தனிநபர் கோரிக்கையை ஏற்று ஊர் முழுவதும் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்ற முயலும் போது, தாயில்பட்டி ஊராட்சி முழுவதும் ஆக்கிரமிப்பு அளவீடு செய்து ஊராட்சி முழுவதும் அகற்ற வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்