தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டில் தெருக்களுக்கு எல்இடி விளக்கு வசதி: திமுக வேட்பாளர் காமராஜ் உறுதி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டு திமுக வேட்பாளரான தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் காமராஜ், நேற்று நேதாஜி தெருவில் உள்ள பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், குற்றச் சம்பவங்கள் அதிகரித்து மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, நீங்கள் வெற்றி பெற்றவுடன் தெருக்களில் எல்இடி விளக்குகள் அமைத்து தருவதுடன், அதனை முறையாக பராமரிக்க வேண்டும், என வலியுறுத்தினர்.இதற்கு பதிலளித்த காமராஜ், ‘தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் உடனுக்குடன் நடைபெற்று வருகிறது. அதுபோல், தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டில் நான் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து தெருக்களிலும் எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படும்,’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, பா.பாரதி, கோ.ராஜேந்திரன், பட்டுராஜா, கந்தசாமி, சீனா, ரமேஷ், பாஸ்கர், விக்கி (எ) யுவராஜ், பன்னீர்செல்வம், ஏழுமலை, சதீஷ், தனஞ்செயன், பாலா, கோபி, குருமணி, கணபதி, சுரேஷ், மைக்கேல், நியூட்டன், ஹரிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்….

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்