தாம்பரம் மாநகராட்சி அரசிதழில் வெளியீடு

சென்னை: தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையில் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும், என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாம்பரம் நகராட்சியை புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்த அரசாணை கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதில், தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள், சிட்லபாக்கம் உள்ளிட்ட 5 பேரூராட்சிகளின் மொத்த பரப்பு 87.64 சதுர கி.மீ ஆகும். மொத்த மக்கள் தொகை 9,60,887, வருவாய் ரூ.303.93 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டது குறித்த சட்டம் அரசிதழில்  நேற்று முன்தினம் வெளியானது. அந்தவகையில், தாம்பரம் மாநகராட்சியாக்கப்பட்டதற்கான சட்டம் அமலுக்கு வந்துள்ளது. தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் மற்றும் செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை மற்றும் திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக அரசிதழில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தாம்பரம் 20வது மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு