தாம்பரம் மாநகராட்சியில் திமுக வேட்பாளர்களாக களம் காணும் தம்பதி: அதிமுகவில் தாய், மகன் போட்டி

சென்னை: நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள மொத்தம் 70 வார்டுகளில் திமுக 58 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 5, 22, 25, 64, 65 ஆகிய 5 வார்டுகளிலும், மதிமுக 26, 35 ஆகிய 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 28, 61 ஆகிய 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 20, 52 ஆகிய 2 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 50வது வார்டிலும் போட்டியிடுகிறது. இதில் திமுக சார்பில் 56வது வார்டுக்கு பெருங்களத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர் போட்டியிடுகிறார். இவர், ஏற்கனவே 1996 முதல் 2016ம் ஆண்டு வரை பெருங்களத்தூர் பேரூராட்சி தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 57வது வார்டில் அவருடைய மனைவி கமலா சேகர் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கடந்த முறை கவுன்சிலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் 70வது வார்டுகளில் 67 வார்டுகளுக்கு அதிமுக சார்பிலும், மீதமுள்ள மூன்று வார்டுகள் கூட்டணி கட்சிகளான புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 13வது வார்டில் முன்னாள் பல்லாவரம் எம்எல்ஏ தன்சிங்கின் மனைவி தனம் தன்சிங் போட்டிருக்கிறார், அதேபோல 22வது வார்டில் தன்சிங்கின் மகன் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார். …

Related posts

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு

அதிமுக பகுதி செயலாளர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…