தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் பாலியல் தொழிலாளியை நிறுத்தி கார் டிரைவர்களிடம் வழிப்பறி: மர்ம கும்பலுக்கு வலை

பூந்தமல்லி: மதுரவாயல் – தாம்பரம் பைபாஸ் சாலையில் இரவில் பாலியல் தொழிலாளியை நிற்க வைத்து, கார் டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் வானகரம் டோல்கேட் அருகே நேற்று முன்தினம் இரவு வாகனங்களை கைகாட்டி ஒரு பெண் லிப்ட் கேட்டுள்ளார். காரில் வேகமாக வந்தவர் அந்த பெண்ணை பார்த்துள்ளார். ஆனால், அச்சத்தில் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். பின்னர் அவரை தொடர்ந்து பின்னால் மற்றொரு கார் வந்துள்ளது. அந்த கார் டிரைவர் வாகனத்தை நிறுத்தி, உதவி செய்ய அந்த பெண்ணை காருக்குள் அமரவைத்து எங்கு செல்ல வேண்டும் என்று விசாரித்துள்ளார். அப்போது சாலையோர புதரில் ஒளிந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஓடிவந்து, திடீரென காருக்குள் ஏறியுள்ளனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார் டிரைவர் கழுத்தில் வைத்து அவரிடம் இருந்த பணம், செல்போன், விலை உயர்ந்த பொருட்களை பறித்துள்ளனர். டிரைவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரது காருக்கு முன்னால் சென்ற காரில் இருந்தவர் ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என சந்தேகத்தின்பேரில் டோல்கேட் அருகே ரோந்துப் பணியில் இருந்த போலீசரிடம் தெரிவித்துள்ளார்.அதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீசார் வந்துள்ளனர். போலீசார் வருவதை பார்த்த அந்த மர்ம கும்பல், அங்கிருந்து தப்பி சென்று விட்டது. காருக்குள் இருந்த அந்த பெண்ணை, கார் ஓட்டுனர் பிடித்து வைத்துள்ளார். விசாரணையில், கோயம்பேடு பகுதியை சேர்ந்த சாந்தி என்பதும், பாலியல் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. மேலும், வானகரம் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்த சாந்தியை மர்ம கும்பல் வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அந்த வழியாக வரும் கார் டிரைவர்களிடம் லிப்ட் கேட்பது போல், நிறுத்த சொல்லி உள்ளனர்.அந்த பெண்ணும், வேறு வழியின்றி லிப்ட் கேட்பதுபோல் காரை நிறுத்தியுள்ளார். இதை பயன்படுத்தி வழிபணறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 5 பேர் யார் என்பது குறித்து போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை