தான்தோன்றி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

நீடாமங்கலம், ஆக. 24: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள தான்தோன்றி அய்யனாருக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 21 ம் தேதி காலை விக்னேஷ்வரபூஜை, கணபதிஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தது.மாலை முதற்கால யாகபூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 22ம் தேதி இரண்டாம் கால பூஜை மற்றும் மருந்து சாத்தல் நிகழ்ச்சி நடந்தது.காலை மூன்றாம் ,மாலை நான்காம் கால யாக பூஜைகள் நடந்தது.

நேற்று காலை சிவாச்சாரியார்களின் மந்திரங்கள் முழங்க அய்யனார் மற்றும் பரிவார மும்மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம், பிறகு தான் தோன்றி அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகயள் மூல ஆகாய கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளைஅய்யம்பேட்டை கிராம வாசிகள் செய்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை