தாஜ்மகாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை…. புகைப்படத்தை வெளியிட்டது இந்திய தொல்லியல்துறை!!

லக்னோ: தாஜ்மகாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகலாய அரசர் ஷாஜஹான் தனது மனைவி நுார்ஜஹான் நினைவாக  கட்டியது தாஜ்மகால். ஆக்ராவில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாக பாஜ பிரச்னையை எழுப்பி வருகிறது. இக்கோயிலில் இருந்த சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதை திறந்து பார்க்க உத்தரவிடக் கோரி, பாஜ செய்தி தொடர்பாளர் ரஜ்னீஷ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த தகவலை கேட்க நீங்கள் யார்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது போன்ற விவாதங்கள் வரவேற்பு அறைகளில்தான் நடக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் அல்ல. எனவே, அறைகளை திறந்து சோதனையிட உத்தரவிட முடியாது,’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தனது பருவ இதழில் தாஜ்மகால் அறைகளின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என்று ஏஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள அந்த அறைகளை பராமரிக்கும் பணி நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்….

Related posts

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்