தாக்குதலுக்கு உள்ளான மருத்துவரின்கிளீனிக்கை சீரமைத்த கிராம மக்கள்

காரைக்கால், ஏப். 12: காரைக்காலை சேர்ந்த டாக்டர் ஞானமணி (35). அம்பகரத்தூர் பகுதியில் தனியார் கிளீனிக் நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனியார் லேப் உரிமையாளர் பஷீர் (36) இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. கடந்த 5 ஆம் தேதி இரவு பஷீர் உள்பட 31 பேர் ஞானமணி கிளீனிக்கில் புகுந்து டாக்டர் ஞானமணியை சரமாரியாக தாக்கியும், அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள், சிசிடிவி கேமராக்கள், கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.
தாக்குதலில் படுகாயமடைந்த டாக்டர் ஞானமணி கொடுத்த புகாரின்பேரில் தனியார் லேப் உரிமையாளர் பஷீர் உள்ளிட்ட 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞர்கள், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டதோடு, தவறுதலாக நடந்துவிட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தனர். இதற்கிடையே அம்பகரத்தூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து சேதமடைந்த கிளீனிக்கை முழுவதுமாக சீரமைத்து டாக்டர் ஞானமணியிடம் வழங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் கிளீனிக் நடத்துவதற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளனர். கிராம மக்களே ஒன்றிணைந்து கிளீனிக்கை சீரமைத்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் இதுவரை ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்