தாக்கத்தை குறைக்காத கொடிய வைரஸ்: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 22.92 கோடியை தாண்டியது.! 47.04 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47.04 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 47,04,927 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 22,92,60,563 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20,58,79,944 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 99,211 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.92 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.58 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47.04 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.86 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 99 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது….

Related posts

ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து!!

ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும்: ஜெலன்ஸ்கி!

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க பயணம்.. இந்தியா – அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து..!!