தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப்பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? பாமக தலைவர் அன்புமணி கேள்வி

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த 10 ம் தேதி வரையிலான இரு ஆண்டுகளில், போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 102 வழக்குகளில் அதற்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அவற்றில் 4 வழக்குகளில் மட்டும் தான் மொத்தம் 10 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 98 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 200 க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இது மிகவும் மோசமான, வேதனையளிக்கும் முன்னுதாரணமாகும். ஆனால், போதைப்பொருட்கள் கடத்தலுக்கும், விற்பனைக்கும் மூல காரணமாக இருப்பவர்களை தண்டிக்காமல், போதைப்பொருட்களை எவ்வாறு ஒழிக்க முடியும்? என்ற வினாவை தமிழக அரசு, தனக்குள்ளாக எழுப்பி விடை காண வேண்டும். எனவே, போதைப்பொருள் ஒழிப்புப் பணி மற்றும் குற்றமிழைத்தவர்களை தண்டிக்கும் நடைமுறையில் உள்ள ஓட்டைகளைக் களைந்து, பொறுப்பானவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து போதைப் பொருட்களை ஒழிப்பை விரைவுபடுத்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

எச்.ராஜாவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

இந்தியா முழுவதும் மதுவிலக்கு தேவை.. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கிறது : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி!

சொல்லிட்டாங்க…