தலைக்கவசம்.. உயிர்கவசம்..!: இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்..ஒன்றிய அரசு அறிவிப்பு..!!

டெல்லி: நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஓராண்டு கழித்து புதிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படுகின்றன. இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதன்படி இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கும் மேல் இயக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், விபத்துகளை குறைக்கும் நோக்கில் வழிகாட்டு நெறிமுறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. …

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்