தலிபான்கள் வசமாகிறது வடக்கு ஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தலைதெறிக்க ஓட்டம்

காபூல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான் தீவிரவாத படை நேற்று நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல், அரசுப் படைகள் ஓட்டம் பிடித்தன. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு 3 ஆயிரம் பேரை கொன்றதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா ராணுவம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து நாடு திரும்பி வருகின்றன. அதேபோல், அமெரிக்க படையுடன் இணைந்து போரிட்டு வந்த நேட்டோ படையும் வாபஸ் பெறப்படுகிறது.தனது படைகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஏப்ரலில் அமெரிக்க, நேட்டோ படைகள் அறிவித்ததில் இருந்தே, தலிபான்களின்  தாக்குதல் தொடங்கி விட்டது. ஏற்கனவே, 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களை அரசுப் படைகளிடம் இருந்து கைப்பற்றியுள்ள அது, நேற்று வடக்கு ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து  தாக்குதல் நடத்தியது. இதை தாக்குப் பிடிக்க முடியாமல், அங்கு முகாமிட்டு இருந்த ஆப்கானிஸ்தான் ராணுவ படைகள் ஒட்டம் பிடித்தன. இதன்மூலம், வடக்கு ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதி, தலிபான்களின் வசமாகி இருக்கிறது. இதன்மூலம், அமெரிக்கா ஏற்கனவே கணித்துள்ளபடி, 6 மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தான் அரசை தலிபான்கள் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.* உதவி செய்த 50 ஆயிரம் பேரை கைவிட விரும்பாத அமெரிக்காஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டு இருந்தபோது,  அதன் வீரர்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உதவியாக இருந்தனர். உளவுத் தகவல்களை கூறுவது, அமெரிக்க வீரர்களுக்கு மொழி பெயர்த்து கூறுவது போன்ற செயல்களி்ல் இவர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. தற்போது,  தலிபான்களால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் அவர்களை தேடிப்பிடித்து கொன்று வருகின்றனர். இதனால், தனது நாட்டுக்கு உதவியாக இருந்த இவர்களை கைவிட விரும்பாத அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகம், இவர்களுக்கு தஞ்சம் அளிக்கும்படி ஆப்கானிஸ்தானின் 3 அண்டை நாடுகளான கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளும்படியும், அதற்கு மாற்றாக அந்நாட்டு மக்களுக்கான விசா நடைமுறையில் கெடுபிடிகளை தளர்த்துவதாகவும், நிதியுதவி செய்வதாகவும் கூறப்பட்டு வருகிறது….

Related posts

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

பாரீஸ் ஒலிம்பிக்: 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு..!!