தலிபான்கள் ஒத்துழைத்தால் மட்டுமே ஆக.31க்குள் அமெரிக்க படை வாபஸ்: அதிபர் பைடன் திடீர் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது தலிபான்களின் ஒத்துழைப்பே பொருத்தே முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் பைடன் திடீரென அதிரடியாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க, நேட்டோ படைகள் வரும் 31ம் தேதிக்குள் திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்துள்ளார். தற்போது, தலிபான்கள், அங்கு ஆட்சியை பிடித்துள்ளனர்.அங்கிருந்து வெளியேறி வரும் மக்களை காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க ராணுவ விமானங்கள் பாதுகாப்பாக மீட்டு வருகின்றன. இதனிடையே, தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபைஹூல்லா முஜாகித், `அமெரிக்க படைகள் கூறிய தேதியில் வெளியேறாவிடில், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்,’ என்று எச்சரித்தார். அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறுவ தற்கான கெடு முடிய இன் னும் 5 நாட்களே உள்ளன. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் பைடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், “அமெரிக்க படைகள் வெளியேறும் திட்டத்தை குறித்த காலத்துக்குள் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன். இதில் எந்தளவுக்கு சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது பற்றி தெரியும். தலிபான்கள் உண்மையிலேயே கடும் சவாலாக இருப்பார்கள். எனவே, அவர்களின் ஒத்துழைப்பை பொருத்தே அங்கிருந்து அமெரிக்க படையினர் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேறுவது பற்றி முடிவு எடுக்க முடியும்,’’ என்றார்.* சீனா, தலிபான் முதல் பேச்சுதலிபான் அரசியல் பிரிவின் துணை தலைவர் அப்துல் சலாம் ஹனபி, ஆப்கானிஸ்தானுக்கான சீன தூதர் வாங் யீ இடையே காபூலில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில் “சீனா, ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் இடையே தடையற்ற, பயனுள்ள தொடர்பு மற்றும் ஆலோசனை நடந்தது. காபூல் சீனாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆப்கானிஸ்தானை கட்டமைக்கவும், அங்கு அமைதி நிலவவும் சீனா ஒத்துழைப்பு அளிக்கும்,’’ என்று தெரிவித்தார்.* முப்படை தலைமை தளபதி அதிர்ச்சிஇந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறுகையில், “ஆப்கானிஸ்தானை தலிபான்கள் குறுகிய காலத்தில் கைப்பற்றியது அதிர்ச்சி அளிக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் குவாட் நாடுகள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்,’’ என்றார்….

Related posts

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் மோடியின் தாக்குதலை மக்கள் தெளிவாகப் புரிந்துக் கொண்டுள்ளனர்: பாஜக, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

ஹசீனாவை நாடு கடத்த நடவடிக்கை: வங்கதேசம் அறிவிப்பு